பிரிட்டனில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு: முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

பிரிட்டன் வெள்ளப்பெருக்குபிரிட்டனில் பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் மிகப்பெரிய நதியான தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கரையோரம் இருக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால், தேம்ஸ் நதியின் சில கரைகள் உடைந்து விட்டன.இதனால் லண்டன் அருகேயுள்ள பெர்க்ஷர், சுர்கி ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்து, அவை மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வடிப்பதற்கு நெதர்லாந்தில் இருந்து சிறப்பு கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் மேற்கு இங்கிலாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top