கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

விடுதலை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாள் விழா போலிஸாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் நேற்று(27-11-2014) கொண்டாடப்பட்டது.

unnamed (2)

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, சென்னை ராயபேட்டையில் 25-11-2014 நள்ளிரவு 12.00மணிக்கு  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 60கிலோ எடையுள்ள கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வீரமுழக்கமிட்டும், தமிழரின் வீர விளையாட்டுக்களுடனும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

birthday

இந்த விழாவில் மே 17  இயக்கம், தமிழர் முன்னேற்றப்படை, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன.

ஈரோட்டில் நேற்று காலை பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்.

வைகோ

மேலும், ஈரோடு மதிமுக மாவட்ட அலுவலகத்தில் பிரபாகரன் பிறந்த நேரமான  மாலை 7.18 மணிக்கு வாணவேடிக்கையுடன் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது இல்லத்தில் கட்சியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று நடந்த குருதிக்கொடை நிகழ்வுகளில் சென்னையில் 2000  யூனிட்களுக்கும் மேல் குருதி வழங்கப்பட்டது. மேலும் நேற்று மாலை பிரபாகரனின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்தில் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்விழா நேற்று கேக் வேட்டி மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது.

கொளத்தூர் மணி

சுவிட்சர்லாந்தின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர்.

ஈரோட்டில் நேற்று மாலை மாலை 5 மணி அளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழர் எழுச்சி விழா என்னும் பெயரில் பிரபாகரன் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1497785_547145125429170_3012344555439283670_n

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை.கு.ராம கிருஷ்ணன் தலைமை வகித்த இந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் மே 17  இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இயக்குனர்கள் கௌதமன், புகழேந்தி தங்கராஜ், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top