ஐ.பி.எல். முறைகேடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றம்

cskஐ.பி.எல் அமைப்பிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறு சீனிவாசனை கேட்டுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும் கோரியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக உள்ளவர் பி.சி.சி.ஐ. தலைவருக்கு சொந்தமான நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பது பற்றியும் நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர்.

ஐ.பி.எல். உருவாக்கியுள்ள விதிப்படி, மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் எந்த அணியாவது ஈடுபடுமானால் அதன் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top