லிங்கா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ்!

lingaaரஜினியின் லிங்கா படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்று அளித்துள்ளது. இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

அடுத்த மாதம் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் லிங்கா படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக டப்பிங் ரீரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் படத்தை பார்த்தனர். ஒரு காட்சிக்கும் ஆட்சேபம் தெரிவிக்க வில்லை. எந்த காட்சியையும் வெட்டாமல் ‘யு’ சான்றிதழ் அளித்தனர்.

தணிக்கை சான்று கிடைத்து விட்டதால் ஒரிரு நாளில் படம் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

லிங்கா படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். சந்தானம் காமெடி வேடத்தில் வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அணைக்கட்டு சர்ச்சையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. ரஜினி அணையை பாதுகாக்கும் கேரக்டரில் வருகிறார். சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டம் மற்றும் தற்போதைய கால கட்டம் என இரு கால கட்டங்களில் கதை நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top