ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: முக்தல் குழுவின் முழு அறிக்கையையும் வெளியிட பீகார் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

7th iplஇந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகுல் முக்தல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், சில பக்க அறிக்கையை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அதில், சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை என்று கூறப்பட்டிருந்தது. உடனே, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘‘சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இருப்பதாக முகுல் முக்தலின் முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விதிகளின்படி சீனிவாசனை 5 வருடம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் முக்தலின் முழு அறிக்கையையும் வெளியிட வேண்டும். ஐ.பி.எல். சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் என பி.சி.சி.ஐ. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெய்யப்பன் ஒரு கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே என்று டோனி போன்றோர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல’’ என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top