நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம்

மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது தனது நெஞ்சில் ரத்தம் கசிவதாக பிரதமர் மன்மோகன்சிங் தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் ரயில்வே அமைச்சர் தனது உரையை சுருக்கமாக முடித்துகொண்டார். அத்துடன் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து எம்பிக்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது தனது இதயத்தில் இருந்து ரத்தம் கசிவதாக தெரிவித்தார். அமைதி காக்கும்படி பலமுறை கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு துன்பகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் நடைபெற்ற இச்சம்பவங்களுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமையவிருக்கும் மக்களவைகளுக்கு இது போன்ற சம்பவங்கள் மோசமான முன் உதாரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top