உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் சர்ஜூபாலா, சுவீட்டி இறுதிப்போட்டிக்குத் தகுதி

Sarjubala-Shamjetsabam-Women-World-Boxingஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை சர்ஜூபாலா, தாய்லாந்தை சேர்ந்த சுதாமட் ரக்சட்டை எதிர்கொண்டார். இதில் சர்ஜூபாலா 38-38, 40-36, 39-37 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் கஜகிஸ்தான் வீராங்கனை நசிம் கிசாய்பேயை சந்திக்கிறார்.

81 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை சுவீட்டி அனாஸ்டாசியா செர்னோகொலென்கோவை எதிர்கொண்டார். இதில் சுவீட்டி 39-37, 40-36, 40-36 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். இவர் இறுதிப்போட்டியில் சீனாவைச் சேர்ந்த சியாஒலி யாங்கை சந்திக்கிறார்.

இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top