காஷ்மீர்–ஜார்கண்ட் சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு!

jammu and kashmir assembly election 2014காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (25–ந்தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 2–ந்தேதி 2–வது கட்ட தேர்தலும், 9–ந்தேதி 3–வது கட்ட தேர்தலும், 14–ந்தேதி 4–வது கட்ட தேர்தலும், 20–ந்தேதி 5–வது கட்ட தேர்தலும் நடக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில் மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 87. இதில் முதல் கட்டமாக நாளை மறுநாள் 15 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 18 தொகுதிகளில் 2–வது கட்ட தேர்தலும், 16 தொகுதிகளில் 3–வது கட்ட தேர்தலும், 18 தொகுதிகளில் 4–வது கட்ட தேர்தலும், 20 தொகுதிகளில் 5–வது கட்ட தேர்தலும் நடக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 81. இதில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு 13 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 20 தொகுதிகளில் 2–வது கட்ட ஓட்டுப்பதிவும், 17 தொகுதிகளில் 3–வது கட்ட ஓட்டுப்பதிவும், 15 தொகுதிகளில் 4–வது கட்ட ஓட்டுப்பதிவும், 16 தொகுதிகளில் 5–வது கட்ட ஓட்டுப்பதிவும் நடைபெறுகிறது.

காஷ்மீரிலும், ஜார்க்கண்ட்டிலும் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி முதல்கட்ட பிரசாரம் செய்தார். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி பிரசாரம் செய்தனர்.

காஷ்மீரில் பா.ஜனதா காங்கிரஸ் தவிர ஆளும் தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியாக நிற்பதால் 4 முனை போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், லல்லு– நிதிஷ்குமார் கட்சிகளின் கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்த இரு மாநிலத்திலும் முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top