ஜி.கே.வாசன் கட்சிக்கு த.மா.கா. பெயர்: தேர்தல் ஆணையம் ஒப்புதல்!

GK Vasan 200aஜி.கே.வாசன் தொடங்க உள்ள புதிய கட்சிக்கு த.மா.கா. பெயர் வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளார். திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்கான பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தாங்கள் தொடங்க உள்ள புதிய கட்சிக்கு, மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) பெயர் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த ஜி.கே.வாசனின் ஆதரவாளரும், முன்னாள் எம்.பி.யுமான கார்வேந்தன் இன்று சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய கட்சிக்கு த.மா.கா. பெயர் கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றிய முறையான அறிவிப்பை ஜி.கே.வாசன் வெளியிடுவார்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top