பிற நாடுகளுக்கு பரவும் எபோலா வைரஸ்: ஐ.நா கவலை!

ban ki-moonமேற்கு ஆப்ரிக்காவை தொடர்ந்து பிற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவுவது கவலை அளிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவி வருவதாக கூறியுள்ள ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன், இதனைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என்றும் மருத்துவ பணியாளர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மூலம் அடுத்தாண்டு பாதிக்குள் எபோலா நோய் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லைபீரியா, கினியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து தற்போது அருகில் உள்ள மாலி நாட்டிற்கும் எபோலா வைரஸ் நோய் பரவி வருவதால், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மாலி நாட்டில் எபோலா வைரஸ் நோயினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top