காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள்: தஞ்சையில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம்!

vaiko_protest_காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட அனைத்து கட்சி பிரமுர்கள் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு இரண்டு அணைகளை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பும், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூரில் நடந்து வரும் ரயில் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கொட்டும் மழையில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அங்கு வந்த காவல்துறை அதிகாரியை பார்த்து வைகோ கடுமையாக எச்சரித்தார். “இங்கே வராதே, வெளியே போ, தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். இல்லையென்றால் விளைவுகள் பயங்கரமாக ஆகிவிடும்” என்று எச்சரித்தார் வைகோ. இதைத் தொடர்ந்து அந்த காவல்துறை அதிகாரி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டினால் 5 கோடி மக்கள் குடிநீருக்காக பாதிக்கப்படுவார்கள். டெல்டா பகுதியில் நடப்பது அரசியல் கட்சிகளின் போராட்டம் அல்ல, மக்களின் வாழ்வாதார போராட்டம் என்றார்.

இதேபோல், நாகையில் ரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருச்சி- காரைக்கால் ரயிலை மறித்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களும், திருவாரூரில் ரயிலை மறித்த தி.மு.க.வினரும் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top