காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்: ஒபாமாவிற்கு நவாஸ் ஷெரிப் கோரிக்கை

PM-Nawaz-Sharif-to-chair-a-high-level-meeting-today-in-Karachi1இந்திய பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியல் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணம் குறித்து தெரிவித்தார். இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்களுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று ஒபாமாவிடம் ஷெரிப் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் உடனான வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததை சுட்டிக்காட்டிய ஷெரிப், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்துவதாகவும் ஒபாமாவிடம் கூறினார்.

இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், அதற்கான சூழலை உருவாக்குவது இந்தியாவின் பொறுப்பு என்றும் ஒபாமாவிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top