பிப்ரவரி 12 – வரலாற்றில் இன்று!

1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.

1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.

1809 – ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்.

1818 – சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.

1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

1873 – எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.

1912 – சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.

1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.

1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.

1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.

2001 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.

2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

2009 – ஈழத்தில் சிங்களப்படைகள் நடத்திய தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி முருகதாசன் என்ற இளைஞன் சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் ஐ.நா. அலுவலம் முன்பு தீக்குளித்து உயிர் நீத்தான்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top