இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு!

earthquake_indonesiaஇந்தோனேசியாவில் உள்ள வடக்கு மோலுக்கா கடலில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்நாட்டின் வடமேற்கு நகரமான ஹல்மஹேராபரத்திலிருந்து 115 கி.மீ தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை.

கடலுக்கடியில் எவ்வளவு ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்றும் தெரியவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top