பிப்ரவரி 11 – வரலாற்றில் இன்று!

கிமு 660 – ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.

1531 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

1659 – சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.

1752 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.

1809 – ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.

1814 – நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

1826 – லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.

1847 – அமெரிக்கக் விஞ்ஞானி தாமஸ் அல்வா எடிசன் பிறந்தார்.

1873 – ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.

1919 – பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

1929 – இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.

1953 – சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1960 – சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 – சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.

1964 – சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.

1968 – இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.

1971 – ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.

1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.

1979 – அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.

1990 – தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.

1996 – இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005 – ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

2008 – கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top