இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை!

எபோலாஇந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக, நாடு முழுவதுமுள்ள விமானநிலையங்களை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக மூவர் கொண்ட குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இந்த குழுவில், சுகாதாரத்துறை, பயணிகள் விமான போக்ககுவரத்துத்துறை மற்றும் குடியுரிமைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். நிபுணர் குழுவின் உதவியுடன் விமான நிலையங்களை கண்காணித்து அது தொடர்பான அறிக்கை ஒருவாரத்திற்குள் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எபோலா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக 10 நவீன ஆய்வுக்கூடங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் பாதுகாப்புத்துறையின் உதவியை நாடவும் மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினர் எபோலா வைரஸ் சிகிச்சை குறித்து நாடு முழுவதுமுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பயிற்சியை அளிக்கவுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top