ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் மாபெரும் காட்டுத்தீ: மீட்பு பணிகள் தீவிரம்.

காட்டுத் தீஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணங்களில் மிகப்பெரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது.தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளனர்.

தீ வேகமாக பரவி வருவதாகவும்,இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை 26 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 28 இடங்களில் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த காட்டுத் தீ கடுமையாக இருக்கிறது என கூறும் அதிகாரிகள் இந்த சவாலான பணிகளில் 6 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top