காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

13-suprem-court-3-600காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இதுபோன்ற திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அணைக் கட்டும் அறிவிப்பை கர்நாடக அரசு திரும்ப்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசின் திட்டங்களால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாகவும் தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையில் தமிழகம் அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் போது இந்த மனுவும் விசாரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top