சிங்கப்பூர் கலவரம்: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு சிறை

சிங்கபூர் கலவரம்சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 15 வாரம் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கலவரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கட்டுமான தொழிலாளியான சின்னப்ப விஜயரகுநாத பூபதி தம்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பூபதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்ட வல்லுனர்களின் கலந்தாய்வுக்கு பிறகு அவரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் பலியானதை அடுத்து , அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 25 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top