அடுத்த வருடம் 3 படங்களை தயாரிக்கும் பாலா!

directer bala‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இதில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கிராமிய நடனக் கலைஞர்களின் வாழ்க்கை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பாலா இப்படத்தை தயாரித்து வருகிறார். இது தவிர மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு’ படத்தையும் அவர் தயாரித்து வருகிறார். மிஷ்கின் சொன்ன பத்து நிமிட கதை பிடித்துப்போகவே இப்படத்தை தயாரித்ததாக பாலா கூறினார்.

படங்களை தயாரிப்பது குறித்து பாலா கூறும்போது, நான் இந்த வருடமே 3 படங்களை தயாரித்து வெளியிட நினைத்தேன். ஆனால் முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த வருடத்தில் 3 படங்களை தயாரிப்பேன். அதில் ஒன்று நான் இயக்கும் படம். இரண்டு படங்களுக்கு மற்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top