தமிழக பொறியாளர் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

முல்லைப் பெரியாறு அணைதமிழக பொறியாளர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி கேரள அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

முல்லைப் பெரியாறில் தமிழக பொறியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கேரள தலைமை செயலாளருக்கு தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், கேரள அரசின் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) நிவேதா பி.கரணுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், முல்லைப் பெரியாறு தொடர்பாக, 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அணையின் பாதுகாப்பை கேரள போலீசாரும், வனத் துறையினரும் உரிய முறையில் மேற்கொள்வார்கள் என்று கேரள அரசு உறுதியளித்தது.

ஆனால், அப்போது அளித்த உறுதியை மறுக்கும் வகையில், கேரள போலீசார் தற்போது செயல்பட்டுள்ளனர். அதாவது, இன்று (நேற்று) தமிழக தலைமைப் பொறியாளரை தாக்கிவிட்டு, கேரள பத்திரிகையாளர்களும், எம்.எல்.ஏ.வும் சென்றபோது, கேரள போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top