தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது: கருணாநிதி விமர்சனம்

modi with karunanidhiமுல்லைப்பெரியாறு அணை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் கேரள அரசு ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில், கேவியட் மனு தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க தமிழக அரசு முன்வரவில்லை என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அமைச்சரவையையும் சட்டப்பேரவையையும் கூட்ட முதலமைச்சர் பன்னீர்செல்வம் தயங்கக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top