நேபாளத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் சுஷில் கொய்ராலா

சுஷில் கொய்ராலாநேபாளத்தின் புதிய பிரதமராக சுஷில் கொய்ராலா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தில், கடந்த நவம்பர் 19-ம் தேதி
601 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், எந்தக்கட்சியும் பெரும்பான்மை இடங்களைப் பெறாததால், ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில், 194 இடங்களைப் பிடித்த நேபாள காங்கிரஸ் கட்சியும், 173 இடங்களைப் பிடித்த சிபிஎன்-யூஎம்எல் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பான உடன்பாட்டை எட்டின.

இரு கட்சிகளுக்கும் இடையே ஆறு அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, கையெழுத்திடப்பட்டன. இதன்படி, ஞாயிற்றுக் கிழமை நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர், சுஷில் கொய்ராலா பிரதமர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், நேற்று சுஷில் கொய்ராலா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு ஆதரவாக 405 பேரும், யுசிபிஎன்- மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த 148 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.விரைவில் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை, பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top