ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 209 பேர் மனுத்தாக்கல்!

jammu and kashmir assembly election 2014ஜம்மு- காஷ்மீர் 2-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்காக 18 தொகுதிகளில் போட்டியிட 209 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் 2-ந்தேதி குப்வாரா, குல்காம், ரியாசி, உதம்பூர் மற்றும் பூஞச் மாவட்டத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இதற்கான மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 209 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், 4 மந்திரிகள், 16 எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் துணை சபாநாயகரும் அடங்குவர். அதிகபட்சமாக ரியாசி மற்றும் நூராபாத் ஆகிய தொகுதிகளுக்கு தலா 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற வரும் 17-ந்தேதி கடைசி நாளாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top