ஐ.பி.எல். சூதாட்டம்: முத்கல் கமிட்டி அறிக்கையில் உள்ள பெயர்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

csk owner srinivasanஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் குழு, உச்ச நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயர்களை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில் ஓவெய்ஸ் ஷா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகிய வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ஐ.சி.சி. தலைவராக உள்ள என்.சீனிவாசன், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா மற்றும் ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தியுள்ளதாக முத்கல் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பின்னர் இவ்வழக்கை வரும் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top