பாகிஸ்தான் போராட்டம்: இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்!

imran-khan-khurram--முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்.

அவருடன் அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஸீத் அகமது பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் தலைவர் தைருல் காத்ரி ஆகியோரும் போராட்டம் நடத்தினார்கள். 3 கட்சிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் டிவி ஒளிபரப்பு நிலையம் தாக்கப்பட்டது.

இது தொடர்பாக இம்ரான்கான் மற்றும் 2 கட்சி தலைவர்கள் மீதும் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் மற்றும் 2 தலைவர்களுக்கும் கைது வாரண்டு பிறப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக இம்ரான்கான் கூறும்போது, கைது வாரண்டு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை கைது செய்யட்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். கைதாவதில் இருந்து தப்பிக்க ஒருபோதும் முன்ஜாமீன் பெறமாட்டேன். வருகிற 30–ந் தேதி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்த இருக்கிறோம். அப்போது வேண்டுமானாலும் என்னை கைது செய்யட்டும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top