பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

bhavani_sagarஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2ஆம் போக பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பவானிசாகர் அணையின் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24ஆயிரத்து 504 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top