ஆவின் பால் விலையை குறைக்கக்கோரி மனு: 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

உயர்நீதிமன்றம்ஆவின் பால் விலையை குறைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சூர்யபிரகாசம் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர், பால் விலையைக் குறைக்கக் கோரியும், ஆவின் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக அரசு மற்றும் ஆவின் நிறுவனத்துக்கு தாம் மனு அனுப்பியிருந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய மனுதாரர், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதைக்கேட்ட நீதிபதி, ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும் என்ற மனுவை பரிசீலித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top