அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

chennai-regional-metrilogicவங்கக்கடலின் தென் பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர்ந்து வரும். தமிழக கடலோரத்தை நெருங்கும் போது அந்த காற்றழுத்தம் வலுவடையக்கூடும்.

ஏற்கனவே ஆந்திரா மாநிலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு நீடித்தப்படி உள்ளது. இந்த இரு நிலைகளால் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதிய காற்றழுத்தம் இந்த வார இறுதியில் தமிழக கடலோரத்தை நெருங்கும். இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 13, 14–ந்தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் நகரும் திசையை பொறுத்து சென்னையில் மழை தாக்கம் இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top