மத்திய அமைச்சரவையில் சிவசேனா இடம்பெறுவது சந்தேகம்!

shiva-senaமத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அதில் சிவசேனா இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. மகாராஷ்டிவில் பாரதிய ஜனதா, சிவசேனா இடையேயான உறவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளது. இந்த சூழலில், இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், சிவசேனாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாய்க்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக சிவசேனாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த் கீத்தே நேற்று டெல்லி சென்றார். ஆனால், மோடியை சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்கி தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, உடனடியாக மும்பை திரும்புமாறு அவருக்கு சிவசேனா தலைமை உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் மோடியை சந்திக்காமலே திரும்பினார். இதன் காரணமாக, இரு கட்சிகள் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, சிவசேனாவைச் சேர்ந்த அனில் தேசாய் இடம்பெறப் போவதில்லை என்றும், பதவியேற்பு நிகழ்ச்சியை சிவசேனா புறக்கணிக்கும் என்றும் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top