எபோலோவுக்கு 4,950 பேர் பலி: உலகசுகாதார நிறுவனம் தகவல்!

எபோலாஉலகளவில் எபோலா நோய் தாக்கி  4,950 பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக எபோலா என்னும் கொடிய வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. அதிலும் லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக  அமெரிக்கா  உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்  ஆப்பிரிக்க நாடுகளிலும்  பெரும் பீதி நிலவி வருகிறது.

நோய்த் தாக்கம் உள்ள நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டாலும் எபோலா வைரசின் தாக்கம் குறைந்த பாடில்லை.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்கிய 13,241 பேரில், சிகிச்சை பலனளிக்காமல் 4,950 பேர் மரணமடைந்துள்ளனர். அதிலும் கடந்த 4 ஆம் தேதி அன்று மட்டும் கினி, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் 132 பேர் பலியாகி உள்ளனர்  என்று கூறியுள்ளது.

இதையடுத்து எபோலா பாதித்த பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top