மீனவர்களின் தூக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி!

தமிழக மீனவர்கள்தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்யத எமர்சன், அகஸ்டஸ், வில்சன் பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து போதைப் பொருள் கடத்தியதாக பொய்யாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்துதல் குற்றத்திற்கான பிரிவின்கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்று இலங்கை அரசால் தொடரப்பட்டது. இந்நிலையில், 30.10.2014 அன்று கொழும்பு உயர் நீதிமன்றம் மேற்படி 5 மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து ஆணையிட்டது. இந்த செய்தியை அறிந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு அன்றே எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் 5 அப்பாவி மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையிலிருந்து அவர்களை காப்பாற்றி விரைவில் விடுதலை செய்திடவும், தாயகம் திரும்பிடவும், இராஜாங்கரீதியாக இந்த பிரச்னையை இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரும் மேல் முறையீடு செய்யும் வகையில் உரிய சட்ட உதவிகளை வழங்கிட இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். இந்த சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் நகல் பெறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பாணையானது சிங்கள மொழியில் அமைந்துள்ளதால், அதனை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து, 5 அப்பாவி மீனவர்களை விடுதலை செய்திட வரும் திங்கட்கிழமை (10.11.2014) அன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மேல்முறையீட்டு வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 5 மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்கான மிகச்சிறந்த சட்ட வல்லுநர்க ஆஜராவதற்கான மிகச்சிறயத சட்ட வல்லுநர்கள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சட்ட வல்லுநர் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மொத்த செலவினமான 20 லட்சம் ரூபாய் முதல்வரின் உத்தரவின்படி இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு இன்று (8.11.2014) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top