தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இலங்கையில் தூக்கு தாண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி ஐந்து தமிழ் மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை மற்றும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.

தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீது போதை மருந்து கடத்தியதாக பொய்க்குற்றம் சுமத்தி அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது இலங்கை அரசு. அப்பாவி தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வருங்கால இந்தியா கட்சி, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் ஆகிய இயக்கங்கள் கலந்து கொண்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top