காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகபட்டினத்திற்கு தென் கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், இது 9ஆம் தேதி காலை ஆந்திர பிரதேசத்தின் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், ஆந்திர கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top