தங்க மீன்கள் வேறு வருத்தப்படாத வாலிபர் சங்கம் வேறு: இயக்குனர் ராம் – சிறப்பு காணொளி!

பிஹைண்டுவுட்ஸ் இணையதளம் நடத்திய ஐஐடிஎம் திரைப்பட விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கடந்த வருடம் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தங்க மீன்கள் திரைப்படமும் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் படத்தை பார்த்த பின்னர் இயக்குனர் ராமுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பும் அமைத்து கொடுக்கப்பட்டது.

thanga meenkal

இதில் திரைப்பட ஆர்வம் கொண்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். படம் முடிந்த பின்னர் அவர்கள் இயக்குனர் ராமிடம் இத்திரைப்படம் தொடர்பாக அடுக்கடுக்காக பல கேள்விகளை தொடுத்தனர். அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் இயக்குனர் ராம் பதிலளித்தார்.

அதிலும் குறிப்பாக, ரசிகரின் கேள்வி ஒன்றிற்கு “தங்க மீன் போன்ற படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற கமர்ஷியல் படத்துடன் ஒப்பிடக்கூடாது” என ராம் அளித்த பதில் விழாவில் பங்குபெற்ற அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த காணொளி இதோ உங்களுக்காக:-


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top