தமிழகத்தில் இந்தாண்டு அதிக மழை பொழிய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiவடகிழக்கு பருவ மழையால் இந்தாண்டு தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வழக்கமாக தமிழகத்திற்கு வடகிழக்கு பருவ மழையின் போது 44 சதவிகித மழை கிடைக்கும். இந்த ஆண்டு பருவ மழை தொடங்கியதில் இருந்து இதுவரை 26.5 சதவிகித மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top