இயற்கை வளங்களை தனியார்களுக்கு தாரைவார்க்கும் மோடியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

10710547_971580686192724_4236568214856073548_nஇந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு வேல்முருகன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு, திராவிட விடுதலை இயக்கத் தலைவர் தோழர் விடுதலை இராஜேந்திரன்,  எஸ்.டி.பி.ஐ மாநில பொது செயலாளர் நிஜாம் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பேசும்பொழுது இந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் விதமாக கொள்கைகளை, மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி அரசு கடைபிடித்து வருகிறது. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்களை வளர்ப்பதற்கு பதிலாக, பல்வேறு சலுகைகளுடன் அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நாட்டின் வளங்களை தாரை வார்க்கும் செயலை முன்னெடுத்து வருகிறது.

மேலும் பாஜக பொறுப்பேற்றது முதல் சமூகங்களுக்கிடையே பிரிவினையை தூண்டும் விதத்தில் அறிக்கைகளை, பேச்சுக்களை அக்கட்சியின் எம்பிக்கள், தலைவர்கள் செய்து வருகின்றனர். போலியான பிரச்சாரங்கள் மூலம் விரோத அரசியலையும் பாஜக மேற்க்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிரச்சனைகளை உருவாக்கி நாட்டை பிளவு படுத்தும் செயல் திட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வாக்கும் மோடி அரசின் கொள்கைகளை கண்டித்தும், நாட்டை பிளவுபடுத்தும் வகுப்புவாத அரசியலை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

10710547_971580686192724_4236568214856073548_n1546456_971580736192719_2084613989800899960_n


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top