ராஜபட்சே உருவ பொம்மை எரிப்பு: 50 பேர் மீது வழக்கு

4addf5ec-b7e2-4f82-a48d-9abca54ffa50_S_secvpfவிழுப்புரத்தில், இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை வெள்ளிக்கிழமை எரித்த 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜபட்சேவின் உருவபொம்மையை எரித்து, எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top