தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

gnanadesikanதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரசை மறு சீரமைக்க உதவுவதற்காக எவ்வித தயக்கமும் இன்றி ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கென மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டதாகவும், பல்வேறு கூட்டங்களை நடத்தியதாகவும் ஞானதேசிகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கட்சித் தலைவராகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது ராஜினாமா குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள ஞானதேசிகன், பல்வேறு விவகாரங்களில் தம்மை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், கட்சியில் பொம்மை போன்று செயல்பட விரும்பவில்லை என்றும் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top