மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!

தேவேந்திர பட்னாவிஸ்மகாராஷ்டிரா முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என சிவசேனா தெரிவித்துள்ளது.

புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. பட்நாவிசுடன், மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியில், சிவசேனா கட்சி சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என அக்கட்சியின் எம்.பி. விநாயக் ராவுத் தெரிவித்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் பாரதிய ஜனதா தங்களை தொடர்ந்து மரியாதைக் குறைவாக நடத்துவதே பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top