ரஷியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

10-gun-shot-high-speed-photographyரஷியாவில் சக்ஹாலின் தீவு உள்ளது. அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் ஒரு மர்ம நபர் புகுந்தான். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டான். அதில், ஒரு கன்னியாஸ்திரியும், தேவாலய ஊழியர் ஒருவரும் என 2 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை கைது செய்தனர். ஆனால், அவனது பெயரை வெளியிடவில்லை. ஒரு தனியார் பாதுகாப்புத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் அவன் எதற்காக துப்பாக்கியால் சுட்டான் என்று தெரியவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top