அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது

cyclone hudhudஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை கடந்த 12–ந் தேதி ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் அந்த நகரம் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகி உள்ளது. அரபிகடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்து உள்ளது இந்த புயலுக்கு நிலோஃபர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் மும்பையில் இருந்து 1270 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று அதிகாலை நிலவரப்படி தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இந்த புயல் வடக்கு குஜராத்-பாகிஸ்தானை நோக்கி நகருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது அது தீவிர புயலாக மாறும். இந்த புயல் பாகிஸ்தான் கடற்கரை வடக்கு குஜராத்தில் உள்ள நலியாவில் வருகிற 31–ந் தேதி காலை கரையை கடக்கிறது.

இந்த அதி தீவிர புயல் குஜராத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களை கடுமையாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத்தில் உள்ள வடக்கு பகுதியான சவுராஸ்டிரா, கட்ச் பகுதியில் பலத்த மழை பெய்யும். அடுத்த 4 தினங்களுக்கு குஜராத்தில் கடுமையாக மழை பெய்யும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top