பொங்கல் முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

metro railபொங்கல் பண்டிகை முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.\

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ”சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அடுத்த மாதம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார். அதன்பின் வருகின்ற பொங்கல் தினத்தன்று முதல் முறையாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த வழித்தடத்திற்கான பயணக் கட்டணம் தற்போது தற்காலிக அடிப்படையில் தயாரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. முறையாக அரசின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன்பின் முறையான அறிவிப்பு வெளியிடப்படும்.

மாதிரி கட்டணமாக, முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8ம், 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை ரூ.10ம், 4 முதல் 6 கி.மீ. வரை ரூ.11ம், 6 முதல் 9 கி.மீ. வரை ரூ.14ம், 9 முதல் 12 கி.மீ. வரை ரூ.15ம், 12 முதல் 15 கி.மீ. வரை ரூ.17ம், 15 முதல் 18 கி.மீ. வரை ரூ.18ம், 18 முதல் 21 கி.மீ. வரை ரூ.19ம், 21 முதல் 24 கி.மீ. வரை ரூ.20ம், 27 கி.மீ. வரை ரூ.23ம் வசூலிக்கப்பட உள்ளது.

இந்த கட்டண விவரம் டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top