எபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு!

WHOஎபோலா நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எபோலா நோய்க்கு இதுவரை பத்தாயிரத்து 141 பேர் பாதிக்கபட்டுள்ளனர், 4,922 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

வளர்ந்த நாடுகள் கூட இந்த நோய் தடுப்புக்கான நடவடிக்கைகளில் வெற்றி பெற முடியவில்லை. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை எபோலா நோய் தாக்கி உள்ளது. அதில் 4,922 பேர் உயிரிழந்திருக்கின்றனர். லைபீரியாவில் 4,655 பேர், சியாரா லியோனேவில் 3,896 பேர், கினியாவில் 1,553 பேர், நைஜீரியாவில் 20 பேர், அமெரிக்காவில் 4 பேர் மற்றும் செனகல், மாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் என எபோலா நோய் தாக்கியுள்ளது.
இந்த நாடுகளில் பணியாற்றிய 450 சுகாதார பணியாளர்களும் எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் 244 பேர் உயிரிழந்திருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top