சென்னையில் இன்று என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Neyveli-Ligniteஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன் 53-வது நாளாக தொடரும் நிலையில், என்.எல்.சி. தலைவர் சுரேந்திர மோகனிடம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகியவற்றின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திய பின்னர், ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அதுகுறித்து விவாதித்தனர். பின்னர் சுரேந்திர மோகனுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்ததையை அவர்கள் நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top