மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பாஜக-வின் தேவேந்திரா ஃபட்நாவிஸ்?

Devendra-Fadnavisமகாராஷ்டிரா முதலமைச்சராக, பாரதிய ஜனதா கட்சியின் இளம் தலைவர் தேவேந்திரா ஃபட்நாவிஸ் அடுத்த வாரம் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லாத நிலையில், அக்கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான 19-ம் தேதியே, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஆனால், அதனை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து பாரதிய ஜனதா தலைமை ஆலோசித்து வருகிறது.

இதனிடையே, சிறிய அரசியல் கட்சிகளும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சுமார் 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

எனவே, சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வரை காத்திருக்காமல், மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 27-ம் தேதி, தேவேந்திரா ஃபட்நாவிஸ் மகாராஷ்ட்ரா முதலமைச்சராக பொறுப்பேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top