ஹரியானாவில் பாஜக தனித்து ஆட்சி: மகாராஷ்ட்ராவிலும் முன்னணி!

64036ab0-5bc2-42fa-ad01-e21a3fc24ebe_S_secvpfமகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஹரியானாவில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவிலும் அக்கட்சி முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்ட்ராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மகாராஷ்ட்ராவில், பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதேபோல், ஹரியானாவில் பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம் கட்சிகள் களத்தில் நின்றன.

இந்த தேர்தலின் வாக்குப்பதிவுகள் எண்ணிக்கை இன்று (19ஆம் தேதி) காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில், மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. முன்னிலை பெற்று வருகிறது.

இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி, மகாராஷ்ட்ராவில், பா.ஜ.க. 113 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், சிவசேனா கட்சி 62 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 45 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 26 இடங்களில் இதர கட்சிகள் முன்னிலையில் உள்ளது.

இதேபோல், ஹரியானாவில், 53 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 11 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 8 இடங்களில் இதர கட்சிகள் முன்னிலையில் உள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் இன்று மாலைக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானா மாநில நிலவரத்தின்படி, 53 இடங்களில் முன்னணியில் உள்ள பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top