மேற்கு இந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

Indian-players-Virat-Kohli-and-Suresh-Raina-during-2nd-ODIமேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ரஹானே களமிறங்கினர். வந்த வேகத்தில் இருவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இரண்டாவதாக களமிறங்க வேண்டிய கோலிக்கு பதிலாக அம்பதி ராயுடு களமிறங்கினார். தனது பங்குக்கு 54 பந்துகளில் 32 ரன் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்து கோலி, ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இருவரும் சீராக ரன்களை உயர்த்தினர்.

மிகவும் கவனமாக ஆடிக்கொண்டிருந்த இவர்களை வெளியேற்ற மேற்கு இந்திய தீவு பந்து வீச்சாளார்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரை சதம் அடித்த ரெய்னா 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து தோனியும், கோலியும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் வெகு நேரம் நீடிக்கவில்லை.

கோலி 78 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 6 ரன்களில் கிளீன் போல்டு ஆனார். தோனி கடுமையாக முயற்சி செய்தும் மேற்கு இந்திய தீவு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்தது. தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். மேற்கு இந்திய தீவு தரப்பில் அதிகபட்சமாக ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேரன் பிராவோ, ட்வெய்ன் ஸ்மித் ஜோடி மிக சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் பவுலர்களை திணறச் செய்து ரன்களை வெகுவாக எடுத்தனர். நிதானமாக ஆடிக் கொண்டிருந்த பிராவோ சமி பந்துவீச்சில் 26 ரன்களில் போல்ட் ஆகி அவுட் ஆனார். ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த கீரன் பொல்லார்டு இணைந்தார்.

இருவரும் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். 40 ரன்கள் எடுத்திருந்த பொல்லார்டு மிஸ்ரா பந்து வீச்சில் துரதிஷ்டவசமாக போல்ட் ஆகி வெளியேறினார். பின்பு சமுவேல்ஸ் களமிறங்கினார். நிதானமாக அரைசதம் கடந்த ஸ்மித் 97 ரன்களில் எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ராம்தின், சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

ஜோடி சேர்ந்த அணி வீரர்கள் இந்தியாவின் பந்தை சமாளிக்க முடியாமல் சாமுவேல்ஸ் 16 ரன்களிலும், ராம்தின் 3 ரன்களிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்ததாக வந்த ரசூல் 4 ரன்களிலும், சமி 1 ரன்களிலும் களத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து விக்கெட்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சமி 4 விகெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும், யாதவ், மிஸ்ரா தலா 1 விக்கெட்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் மேற்கு இந்திய தீவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் பெற்று சமநிலையில் உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top