மேற்கு இந்திய தீவுகள் உடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவிற்கு 322 ரன்கள் இலக்கு!

195263கொச்சியில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. மே.இ.தீவுகள் அணியில் அபாரமாக விளையாடிய சாமுவேல்ஸ் சதம் அடித்து அசத்தினார். 
சாமுவேல்ஸ் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமாமல் களத்தில் இருந்தார். மே.இ.தீவுகள் அணியில் ராம்தீன் 61, சுமித் 46, டேரின் பிராவோ 28, வேய்ன் பிராவோ 17, ரன்கள் எடுத்தனர். இந்திய அணி பந்து வீச்சில் சமி 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, மிஸ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top