தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

delhi-rainஅந்தமான் நிகோபார் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் நிகோபர் பகுதியில் உருவாகி இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த புயல் அடுத்து வரும் நாட்களில் ஆந்திர கடற்கரையோர பகுதிகளை அடையும் என தெரிகிறது. அப்படி நிகழ்ந்தால் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக இந்த புயல் இருக்கும் எனவும் , இதற்கு (HUDHUD) என பெயரிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top